Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை….. 25 ஆம் தேதி கடைசி நாள்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன் படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது.

இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |