நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பார்க்கலாம்.
புதுடெல்லியில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா தனியார் பேருந்தில் தன்னுடைய நண்பருடன் ஏறினார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசினார். இதை தடுக்க வந்த நிர்பயாவின் நண்பரையும் அவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த நிர்பயா மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த பேருந்து டிரைவர் ராம்சிங், அவருடைய சகோதரர் முகேஷ்சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நிர்பயா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. நிர்பயா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நிர்பயா பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலை, கடத்தல், பாலியல் வன்புணர்வு, ஆவணங்களை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 5 குற்றவாளிகளின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 17 வயது சிறுவனின் வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சாகேட் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப் பட்டது. இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் போது முக்கிய குற்றவாளியாளன ராம்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு 17 வயது சிறுவனுக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மற்ற குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை டெல்லி ஹைகோர்ட் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக குற்றவாளிகளின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்ததோடு, மைனர் குற்றவாளியையும் தூக்கிலிட வேண்டும் என்ற பாரதிய ஜனதா சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டில் முகேஷ்சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்ஷய் குமார் சிங் மீதான வழக்கு விசாரணை செய்யப்பட்டு, ஹைகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளிகள் தாக்கல் செய்தனர். இந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன் பிறகு குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு எழுதி அனுப்பினர். இந்த கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் சிங் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து டெல்லி ஹைகோர்ட் குற்றவாளிகளை தூக்கிலிட சிறப்பு வாரண்டு பிறப்பித்தது. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் அதிகாலை 2:30 மணி அளவில் அவசர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி குற்றவாளிகள் 4 பேரும் அதிகாலை 5:30 மணி அளவில் திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டனர்.