Categories
உலக செய்திகள்

மருந்தாளரின் கவனக்குறைவால்… குளிரூட்டப்படாத கொரோனா மருந்துகள்… செலுத்தியவர்களின் கதி என்ன..??

மருந்தாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி மருந்துகளை குளிரூட்டாமல் வைத்திருந்ததால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் என்ற மருத்துவமனையில் மருந்தாளர் ஒருவர் இந்த வாரத்தின் தொடக்கத்தில் 57 மருந்துகளின் குப்பிகளை குளிர்சாதனப்பெட்டியில் பத்திர படுத்தாமல் வெளியே வைத்து விட்டார். இதன் காரணமாக மருந்துகளை பொறுப்பற்ற முறையில் கையாண்டு வீணடித்துள்ளார் என்று கடந்த வியாழக்கிழமை அன்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஒவ்வொரு குப்பியும் சுமார் 10 டோஸ்கள் மருந்துகள் உடையது. எனவே 57 குப்பிகள் என்பதால் சுமார் 570 கொரோனா தடுப்பூசிக்கான டோஸ்களை வீணடித்துள்ளார். மேலும் இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த டோஸ்கள் குளிரூட்டப்படவில்லை என்று தெரிவதற்கு முன்பே 60 டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதனால் முறையான வெப்பநிலையில் சேமிக்கப்படாத இந்த மருந்துகளை  செலுத்திக்கொண்டவர்களின் நிலை என்ன ஆகும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசியின் தயாரிப்பாளர் மாடர்னா கூறியுள்ளதாவது, குளிரூட்டப்படாத தடுப்பூசி செலுத்தப்படுவதால் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவமனைக்கு உறுதியளித்துள்ளார். மேலும் இந்த குளிரூட்டப்படாத மருந்துகள் தொற்றிலிருந்து தான் பாதுகாக்காதே தவிர வேறு எந்த பாதிப்பயும் ஏற்படுத்தாது என்று அரோரா ஹெல்த்கேர் மருத்துவக் குழுமத்தின் தலைவரான டாக்டர் ஜெஃப் பஹ்ர் கூறியுள்ளார். மேலும் அந்த 60 டோஸ்கள் செலுத்தப்பட்ட மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு மீண்டும் தடுப்பு ஊசி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |