தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 889மருந்தாளுநர் பணிகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 4308 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆன எம்ஆர்பி மூலமாக செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி காலியாக உள்ள 889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு தேதி பிறகு அறிவிக்கப்படும்.விண்ணப்பத்திற்கான கட்டணம் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.