Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருந்தாளுநர் பணி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு…. ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 889மருந்தாளுநர் பணிகளுக்கு விண்ணபதிவு ஏற்கனவே முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 4308 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆன எம்ஆர்பி மூலமாக செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருந்தாளுனர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விவரங்களை பெற 94990-55941 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |