கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வடிவேல் முருகன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு சுஜா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வயிறு வலிக்காக தம்பதியினர் தக்கலையில் இருக்கும் மருந்து கடையிலிருந்து மருந்து வாங்கி வந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறச்சகுளத்தில் இருக்கும் சுஜாவின் வீட்டிற்கு புதுமண தம்பதி சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது உன்னோடு வாழ பிடிக்கவில்லை. எனவே நீ குடித்த மருந்தில் மெல்ல கொல்லும் விஷயத்தை கலந்து கொடுத்தேன் என சுஜா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு முருகன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து வடிவேல் முருகன் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் சுஜா மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.