Categories
மாநில செய்திகள்

மருந்து சீட்டு இல்லாமல்… மாத்திரைகளை கொடுத்தால்…சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை…!!

மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகளைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. செல்போன் பறிப்பு, நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதனை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மது உடன் சில மாத்திரைகளை கலந்து கொடுத்து குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னை காவல்துறை அதிகாரிகள் மருந்தகங்களில் மருத்துவ சீட்டு இல்லாமல் யாரேனும் மாத்திரைகளோ அல்லது மருந்துகளை கேட்டால் அவற்றை கொடுக்கக்கூடாது என்றும், மேலும் ஆபத்தான மருந்துகளை கேட்டால் அது குறித்து உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி காவல்துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |