Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருந்து தப்பா கொடுத்துருக்காங்க… கவனக்குறைவால் பறிபோன சிறுமியின் உயிர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

தவறான மருந்து அளித்து உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ் செல்வி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா  என்ற 8 வயது மகள் இருந்தார். தமிழ்செல்வி கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது மகளுக்கு தொண்டையில்  பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது அறுவை சிகிச்சை நடந்து சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த சங்கீதாவை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அங்குள்ள மருத்துவர்கள் சங்கீதாவை பரிசோதித்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்னால் முறையான பரிசோதனை கொடுக்கப்படவில்லை என கூறினார்.

மேலும் அந்த சிறுமிக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்ட காரணத்தால் மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்   சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்பு  தமிழ்ச்செல்வி எனது மகளின் இறப்பிற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனுவானது மதுரை உயர்நீதிமற்ற கிளையில் நீதிபதி சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி மருத்துவர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட சங்கீதாவின் உயிரிழப்புக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு தரப்பில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Categories

Tech |