Categories
தேசிய செய்திகள்

மருந்து பாட்டில்களுக்கு இனி இது கட்டாயம்…. மத்திய அரசு எடுத்த முடிவு…!!

நாடு முழுவதும் அதிகம் விற்பனை செய்யப்படும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளின் தரம் மற்றும் அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக போலி மருந்து விற்பனையை தடுக்கவும் டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் கடையில் வாங்கும் மருந்து போலியானதா அல்லது தரமானதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

போலி மருந்துகளை கண்டறிந்து, அவற்றின் புழக்கத்தை தடுக்கும் நோக்கில் மாத்திரை அட்டைகளின் மீது QR பார்கோடு அச்சிடும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. ஆன்டிபயாடிக், இதய நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட முன்னணி 300 மருந்துகளுக்கு, முதற்கட்டமாக இந்த பார்கோடு நடைமுறை கொண்டவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்கோடை ஸ்கேன் செய்து, மருந்தின் ஆயுட்காலம், தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்களை நுகர்வோர் அறிந்துகொள்ள முடியும்.

Categories

Tech |