தீ விபத்து ஏற்பட்டதால் லாரியின் முன்பகுதி எரிந்து நாசமாகிவிட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரி ஆவாரம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென முன்பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வாகனத்தின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.