மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ராமநத்தத்தில் இருக்கும் மெடிக்கலுக்கு மருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ராஜேந்திரனின் வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.