குடும்ப பிரச்சனையில் மாமியார் மருமகள் மீது தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலநாச்சியார்புரம் கிராமத்தில் ஜோதிமணி- கார்த்தீஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜோதிமணியின் தாயாரான சின்னதாய்க்கும் கார்த்தீஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சின்னதாய் கார்த்தீஸ்வரியின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனையடுத்து கார்த்தீஸ்வரியின் கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தீஸ்வரியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சின்னதாய் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.