லாலுவின் இளைய மகள் தேஜஸ்வி யாதவும் அவரது நீண்டநாள் தோழியான ரேச்சல் கொடின்ஹோவும் டெல்லியில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். டெல்லியில் சைனிக் தோட்டத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர், தேஜஸ்வியின் மனைவி ரேச்சல் இனி ராஜேஸ்வரி யாதவ் என்று அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, புது மனைவியுடன் பீகாருக்கு திரும்பிய தேஜஸ்வி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மனைவியின் பெயரை உச்சரிப்பததற்கு கடினமாக இருப்பதால், எனது தந்தை ராஜஸ்ரி என்று அவர் பெயரை மாற்றியுள்ளார்.
மேலும் பீகாரில் விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் அந்த தேதி விரைவில் முடிவு செய்யப்படும். எந்த இடத்தில் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து லட்சக்கணக்கான லாலுவின் அன்புக்குரியவர்கள் தங்களது மருமகளை வரவேற்க கூடுவார்கள் என்பதால் அதற்கேற்ப இடமும் தேர்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே சாது யாதவின் கோபம் குறித்து லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், எனது மாமாவின் கிரிமினல் நடவடிக்கைகளால் தான் எனது அப்பாவுக்கு 15 வருடத்திற்கு மேலாக கெட்ட பெயர் ஏற்பட்டது.
2 ரூபாய்க்கு கூட பெறாதவர் எனது மாமா. தான் சொத்துக்களை குவிக்க எனது அப்பாவின் பெயரை பயன்படுத்திக் கொண்டவர். என் முன்னாடி வந்து நின்று பேசும் தைரியம் அவருக்கு இல்லை. நான் இப்போது விருந்தாவனில் இருக்கிறேன். ஊர் திரும்பியதும் பாருங்கள் அவருக்குத் தக்க பாடம் புகுட்டுவேன். மேலும் சாது யாதவோ லாலுவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். மேலும் என்னையும் என் பெயரையும் கெடுக்கும் விதமாக பிரகாஷ் ஜா ஒரு படம் எடுத்தார். அப்படத்தின் பெயர் கங்காஜல். அந்த படத்திற்கு லாலுபிரசாத் தான் நிதியுதவி அளித்தார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.