உங்கள் உடலில் இருக்கும் மருவை மிக எளிய முறையில் எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
ஒவ்வொருவருக்கும் தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியம். அதனைப் பேணிக் காப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முகத்தில் ஏற்படும் மரு. அதனைப் போக்குவது மிகவும் சவாலாக உள்ளது. அவ்வாறு உங்கள் உடம்பில் பல இடங்களில் இருக்கும் மருவை எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
மரு உள்ள இடத்தில் அன்னாசிப்பழ சாற்றை தடவி 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இஞ்சியை மருவில் தேய்க்க வேண்டும். இரவில் வெங்காயத்தை உப்பு தேய்த்து ஊற வைத்து, அதனை காலை பேஸ்ட்டாக அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் போது காணாமல் போய்விடும்