உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் முக்கியமான இடம் தான் இந்த பாம்பு தீவு. அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸ்லின் சா பாலோ மாகாணத்தில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் 4,30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட snake island என்ற தீவு உள்ளது. இந்த தீவில் லட்சக்கணக்கான பாம்புகள் இருக்கின்றன. அதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என்று மற்றொரு பெயரும் உள்ளது.
இந்தத் தீவில் கால் வைத்தால் ஒவ்வொரு நான்கு அடிக்கும் குறைந்தபட்சம் ஐந்து பாம்புகள் இருக்குமாம். அதிலும் கோல்டன் பிட் வைப்பர் என்ற பாம்பு வகை அங்கு அதிக அளவில் உள்ளது. அந்த தீவில் உள்ள பாம்புகளை பாதுகாப்பதற்கு இந்த பாம்பு தீவு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீவுக்குள் ஆராய்ச்சி செய்வதற்காக செல்ல வேண்டுமென்றால் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது அவசியம். அங்கு யாருமே செல்ல முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.