Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த இன்ஜினியர்…. நடந்தது என்ன…? தந்தையின் பரபரப்பு புகார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரியநத்தம் கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இன்ஜினியரான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான உதயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பிரபு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சாலையோரம் மர்மமான முறையில் பிரபு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பிரபுவின் உறவினர்கள் அங்கு சென்று உடலில் காயங்களுடன் கிடந்த பிரபுவை பார்த்து கதறி அழுதனர்.

இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பச்சமுத்து தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் வாகனம் மோதி பிரபு இறந்தாரா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |