Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. தாயின் மீது அமர்ந்து விளையாடிய குழந்தை…. பரபரப்பு சம்பவம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாழனூர் இந்திரா நகர் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. தற்போது தமிழரசி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்த தமிழரசியிடம் ஜானகிராமன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தனது தாய் வள்ளியம்மாளிடம் செல்போனில் 2 நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேறு ஒருவரது செல்போனில் இருந்து தனது தாயை தொடர்பு கொண்ட தமிழரசி விரக்தியில் பேசியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த வள்ளியம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக தாழநூறுக்கு சென்றுள்ளார். அப்போது கழுத்தில் புடவை இருக்கிய நிலையிலும், வாய், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையிலும் தமிழரசி இறந்து கிடப்பதை பார்த்து வள்ளியம்மாள் கூச்சலிட்டார். மேலும் 1 1/2 வயது குழந்தை தனது தாயின் மீது அமர்ந்து விளையாடி கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜானகிராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |