நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் முத்தாயம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்தாயம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் முத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முத்தாயம்மாள் நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்தாயம்மாளை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.