கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் சுமைதாங்கி அருகே தனியார் சிமெண்ட் கடை இருக்கிறது. அந்த கடைக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் பூச்செடிகளுடன் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து சிமெண்ட் கடை உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அந்த நபர் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(46) என்பது தெரியவந்தது. பூச்செடி வியாபாரம் செய்யும் செந்தில்குமார் இரவு நேரம் ஆகிவிட்டால் வியாபாரம் செய்யும் ஊர்களிலேயே தங்கி விடுவாராம்.
கடந்த 14-ஆம் தேதி பெண்ணாடம் பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்த செந்தில்குமார் இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.