அரியானாவை சேர்ந்த பிரபல நடிகையும், பாஜக பிரமுகரான சோனாலி போகட் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரின் உடலில் காயங்கள் இருந்த காரணத்தினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்குவான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்றும் இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சோனாலியின் சொத்துக்களை அபகரிக்க இந்த கொலை நடந்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் போதை பொருள் வியாபாரி உட்பட 5 பேர் கைது செய்தனர். இந்நிலையில் மர்மமாக இறந்து போன சோனாலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருக்கு 110 கோடி சொத்து உள்ளதாம். அவருக்கு 96 கோடி மதிப்பில் பண்ணை வீட்டுடன் பல ஏக்கர் நிலம் உள்ளது. 3 கோடி மதிப்புள்ள வீடுகள், கடைகள் உள்ளன. ஆறு கோடி மதிப்பில் ரிசார்ட்டும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.