கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நல்லான்பட்டியில் ஜான்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜான் பாண்டியனுக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது லட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லட்சுமி உடலில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.