Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மர்மமான இறப்பு…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இரவு முழுவதும் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அன்னை தெரசா வீதியில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5-ஆம் தேதி தொடுவாய் மாரியம்மன் கோவில் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து முருகனின் பெற்றோர் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 4-ஆம் தேதி மதியழகன் என்பவரின் வீட்டிற்கு முருகன் சென்றது தெரியவந்துள்ளது.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த  மதியழகனின் மகனான கவியரசன், மதுரை வீரன், வெள்ளிரிசன், அஞ்சம்மாள், ரவிச்சந்திரன், செல்வநாதன் மற்றும் செல்வம் ஆகியோர் முருகனை சுற்றிவளைத்து பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். இதனால் முருகன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4 பேரை காவல்துறையினர் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |