வட அயர்லாந்தில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அயர்லாந்து நாட்டில் மேற்கு பெல்பாஸ்டில் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் 28 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் புலனாய்வு குழுவின் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புலனாய்வு குழுவின் துப்பறியும் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டவர் ஹோலி தாம்சன் என்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஹோலி தாம்சனை கொலை செய்தவர் 31 வயதுடைய நபராக இருக்கலாம் என சந்தேகித்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் இருந்து கூறியதாவது “இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து உள்ளோம். அவர் “ஏ” வகுப்பு கட்டுப்படுத்தப்பட்ட போதை பொருளை விநியோகப்பதில் அக்கறை கொண்டவராக இருந்தார். மேலும் அவர் பெல்பாஸ்டில் உள்ள மஸ்கிரேவ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பொதுமக்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் தெரிய வந்தால் 101 இல் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.