மர்மமான முறையில் ஆறு ஆடுகள் இறந்து கிடந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேகுபட்டி ஊராட்சி பாண்டியம்மன் நகர் வீதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது வீட்டிற்கு பின்புறத்தில் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர்.
நேற்று காலை மர்மமான முறையில் 6 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ஜோதி அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் உடம்பில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடுகளை வைத்து வாழ்க்கையை நடத்தி வரும் ஜோதியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே ஜோதிக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.