Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மர்மமான முறையில் இறந்த சஹானா… “கணவன் போதை பொருளுக்கு அடிமை”… வெளியான தகவல்….!!!!!

அண்மையில் உயிரிழந்த சஹானாவின் வீட்டில் போதை பொருட்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் சஹானாவின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இதையடுத்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுவதால் கணவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

சஹானாவின் கணவரான சஜத் அடிக்கடி குடித்துவிட்டு சஹானாவிடம் பிரச்சனை செய்ததாகவும் அவரை கொடுமை செய்ததாகவும் சஹானாவின் அம்மா கூறியிருந்தார். இந்நிலையில் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக போலீசார் சஜத்தை அவருடைய வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது வீட்டில் கஞ்சா, எம்டிஎம்ஏ, எல்எஸ்டி ஆகியவை இருந்தது தெரியவந்திருகின்றது.

மேலும் சஜத் போதை பொருளுக்கு அடிமையானவர் என்றும் உணவு டெலிவரி செய்கின்ற பெயரில் போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் சஹானாவின் உடம்பில் போதைப்பொருள்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பரிசோதனை நடந்து கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அதன் அறிக்கை வெளிவந்த பிற தான் தகவல்களை கூற முடியும் என கூறியுள்ளனர் போலீஸார்.

Categories

Tech |