மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரின் சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் பள்ளி வாகனங்கள் சூறையாட்டப்பட்டதோடு, மாணவர்களின் சான்றிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்தது. இந்நிலையில் பள்ளி மூடப்பட்டு காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆனால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டதில் எரிக்கப்படட மாணவர்களின் சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ்கள் விரைவில் வழங்க வேண்டும் என மாணவர்-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.