வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்துக் காவல்துறையினர்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் , பெரிய கொள்ளியூரைச் சேர்ந்த பெண் அஞ்சலை, இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுள்ளார் . நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலை வீடு திரும்பாத காரணத்தால் அவரது கணவர் பெருமாள் பல்வேறு இடங்களில் தேடினார். இந்நிலையில் சங்கராபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அஞ்சலை பிணமாக கண்டெடுக்கப்பட்டார் .
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை மீட்டுக் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.