Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்”…. போலீசார் விசாரணை…!!!!!

வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே இருக்கும் பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் செந்தில்குமார் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் தந்தை அதே பகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மெய்ஞானமூர்த்தி மகனின் உடலை பார்த்து கதறி கதறி அழுதார். மேலும் மகனின் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |