Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் பெண் கொலை…. பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

புவனகிரி அருகே பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி சீதா என்கிற சீதாலட்சுமி. இவர்களுக்கு நிஷாந்த்(25) பிரசாந்த் (20) என்ற இரு மகன்களும் நிஷாந்தினி(22) என்ற மகளும் இருக்கின்றனர். முத்துவேல் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.  நிஷாந்தினி திருமணம் ஆகி  சென்னையில் இருக்கிறார். நிஷாந்த், பிரசாந்த் போன்றோர் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இதனால் சீதாலட்சுமி கீழமணக்குடி கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக சீதாலட்சுமி வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் சீதாலட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் கூப்பிட்டு பார்த்தும் எந்த ஒரு பதிலும் இல்லை. இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கதவு இல்லாத ஒரு அறையில் சீதாலட்சுமி வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

மேலும் அவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சீதாலட்சுமி  உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சீதாலட்சுமி கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் விதவை பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புவனகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |