வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக தற்போது அதிபர் கிம் ஜாங் உன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. வடகொரியா மர்மமான நாடாக கருதப்பட்டு வரும் நிலையில் வடகொரியாவின் அதிபராகவும், தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர் கிம் ஜாங் 2.
இவர் கடந்த 2011 ஆம் வருடத்தில் மரணமடைந்துள்ளார். அதன் பிறகு அவரின் மகன் கிம் ஜாங் உன் அதிபராக பதவியேற்றுள்ளார். எனினும் பொதுச்செயலாளர் பதவிக்கு புதியதாக எவரும் தேர்வு செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றுள்ளது அதில் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.