முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் லட்சுமிபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 25 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் பொன்னுச்சாமி இவருக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் காலை நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடும்பத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது பொன்னுச்சாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்னுச்சாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.