Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மர்ம காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு”…. சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம்….!!!!!!

மர்ம காய்ச்சலால் எட்டாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் வேல் நகர் நாலாவது தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் பூஜா. இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சென்ற சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சென்ற 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் சுகாதார அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளித்தார்கள். மேலும் அப்பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் பரவி இருக்கின்றதா எனவும் பரிசோதனை செய்து வருகின்றார்கள்.

 

Categories

Tech |