Categories
உலக செய்திகள்

மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சிறுமி.. சுவிற்சர்லாந்தில் மீட்பு.. தாய் அதிரடி கைது..!!

பிரான்சில் பாட்டி வீட்டிலிருந்து கடத்தப்பட்ட சிறுமி சுவிற்சர்லாந்தில் மீட்கப்பட்டு, அவரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பிரான்சில் பாட்டி வீட்டில் வசித்த 8 வயது சிறுமி மியாவை மர்ம நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடத்திச் சென்றனர். அதாவது சட்டப்படி மியா அவரின் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளார். அப்போது 3 மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று அவரது தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனால் காவல்துறையினர் மியா மற்றும் அவரின் தாய் லோலா, இருவரையும் தேடி வந்தனர். மேலும் சிறுமி கடத்தப்பட்ட இடம் Vosges. இந்த பகுதி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால் அந்த நாடுகளில் உள்ள காவல்துறையினரிடம் அதிகாரிகளை உதவி கோரினர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள வாட் மண்டலத்தில் இருக்கும் Sainte-Croix பகுதியில் காவல்துறையினர் சிறுமியை கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரின் தாய் கைது செய்யபட்டுள்ளார். மேலும் சிறுமியை கடத்துவதற்காக 4 பேர் கொண்ட அந்த கும்பலுக்கு 3,000 யூரோ தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது சிறுமியின் தாய் லோலா கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்ப்பவராம். அவர் வித்தியாசமான கொள்கைகளை கொண்டிருப்பவர் என்றும், சிறுமியை பள்ளிக்கு அனுப்ப அவர் விரும்பவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கும்பல் பிரான்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனாவிற்கு எதிரான விதிமுறைகளை எதிர்ப்பவர்கள் என்றும்  கூறப்பட்டுள்ளது

Categories

Tech |