சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.இவர் இப்போது நடித்து முடித்த படம் சூரை போற்று அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர்கள் போனில் மிரட்டல் விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஆய்வு மேற்கொண்ட போது அந்த அலுவலகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பே காலி செய்து அடையாறுக்கு மாற்றி விட்டதும் , வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது எனறும் தெரியவந்தது.இதனையடுத்து காவல்துறையினர் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களின் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.