நெல்லையில் மர்ம நபர்கள் வாலிபருடைய மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் கட்டிட தொழிலாளியான ரவீந்தர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு அருகிலிருக்கும் காலி இடத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது அதனை மர்ம நபர் திருடி சென்றது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்தர் இதுகுறித்து ஏர்வாடியிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.