மாலத்தீவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நஷீத் படுகாயமடைந்துள்ளார்.
மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வரும் மொஹமத் நஷீத் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த காருக்குள் ஏறும் போது அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், மொஹமத் நஷீத் மீதான தாக்குதலை உடனடியாக கண்டறிய உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் இதுபோன்ற தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் இந்த தாக்குதல் கோழைகள் மேற்கொண்ட தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த தாக்குதல் கொலை முயற்சியாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.