Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தென்காசியில் பரபரப்பு…!!

கமிஷன் கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரண்டையில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் கமிஷன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால் சத்தம் கேட்டு விஜயகுமார் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது மின்மோட்டார் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விஜயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

அந்த விசாரணையில் குண்டு வீசியது கார்த்திக், கிருஷ்ணகுமார், மதன்குமார் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வியாபாரி விஜயகுமாரின் சகோதரரான விவேக் குமார் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த பகையை மனதில் நிறுத்தி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பாறையடி தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |