Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மர்ம நபர்களின் வெறியாட்டம்…. ரத்தவெள்ளத்தில் மிதந்த ஓய்வுபெற்ற ஊழியர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் விளைநிலத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற இரயில்வே துறையினுடைய ஊழியரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஓய்வுபெற்ற இரயில்வே துறையினுடைய ஊழியரான வரதராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் இரவில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு தூங்கச் செல்வது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று வரதராஜ் இரவு தன்னுடைய விவசாய நிலத்திற்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வரதராஜ் நாற்று நடப்பட்ட நிலத்தினுள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் விவசாய நிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் ரத்தக்கரையை சுற்றிலும் மிளகாய் தூளை வீசி விட்டு சென்றதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |