ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி தலைநகரமான பெர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் Kreuzberg என்ற மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு அருகே இருக்கும் Stressmmanestrabe நுழைவுவாயிலில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் ஹெலிகாப்டரின் உதவியோடு அந்த மர்ம நபர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு எதற்காக நடத்தப்பட்டது? நடத்தியவர்கள் யார் ? போன்றவை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்று கூறியுள்ளனர்.