Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்ம நோய் தாக்குதல்…. பரிதாபமாக இறந்த 20 ஆடுகள்…. சோகத்தில் விவசாயிகள்…!!

மர்ம நோயால் 20 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளின் தோல் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

இதனையடுத்து சோதனை முடிவில் ஆடுகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து திருப்பதி கூறும்போது, தோலில் பாதிப்பு மற்றும் காய்ச்சல் காரணமாக திடீரென ஆடுகள் இறந்துவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. எனவே நோய் குறித்து கண்டறிந்து மற்ற ஆடுகளுக்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |