Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மர்ம முறையில் இறந்து கிடந்த பெண்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

ரயில்வே கேட் பகுதியில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூர் பாவாநகர் ரயில்வே கேட் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முதற்கட்ட சோதனையில் அந்த இளம்பெண் விஷம் அருந்தி இறந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீடூர் ரயில்வே கேட் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக நீடூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் இறப்பைப் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |