மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோட்டகடவு பகுதியில் குட்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பாத கன்றுக்குட்டியை குட்டன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அப்போது சோமன் வயல் என்ற இடத்தில் மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குட்டன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கன்றுக்குட்டியை கடித்த விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினர் அப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.