மர்ம விலங்கு கடித்து 30-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் பாலமுருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாலைபுதூரில் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் 12 அடி உயரத்தில் நான்கு புறமும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கழுத்தில் காயத்துடன் 30-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்திக்காடு விளை ஊராட்சி தலைவர் பேரின்ப விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே பண்ணையில் 5 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கதாகும். எனவே மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.