மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நல்ல தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லிசேரி குளம் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான இடத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த போது 6 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு நல்லதம்பி அதிர்ச்சியடைந்தார்.
ஆடுகளின் கழுத்து பகுதியில் காயம் இருந்தது. மர்ம விலங்கு ஏதோ கடித்ததால் ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.