கால்நடைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வெட்டு பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கோழிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் கால்நடைகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பட்டியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை வழக்கம் போல் பட்டிக்கு சென்ற கந்தசாமிக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 3 கோழிகள் மற்றும் 8 ஆடுகள் போன்றவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.
இவற்றை ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறியதால் உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக கந்தசாமி காவல்துறையினருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் மற்றும் போலீசார் உயிரிழந்து கிடந்த கால்நடைகளை பார்த்தனர். மேலும் திடீரென கால்நடைகள் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் க,ண்காணிப்பு கேமராக்களை அப்பகுதியில் பொருத்தி மர்ம விலங்குகளின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.