Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு”… நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை…!!!

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பாலப்பாளையத்தில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் ஈங்கூர் பாலப்பாளையம் திட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர் விவசாயி சுப்பிரமணி. இவரின் தோட்டத்தில் 45 ஆடுகள் பட்டியில் வைத்து வளர்த்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை அதிகாலையில் சென்று பார்த்தபோது ரத்த காயத்தோடு இரண்டு வெள்ளாடுகளும் 5 செம்மறி ஆடுகளும் இறந்த நிலையில் கிடந்தது. மேலும் 5 ஆடுகள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த கால்நடை டாக்டர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இது பற்றி தகவலறிந்து ஊராட்சி தலைவர் ஈஸ்வரி மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, கால்நடை துறையை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டார்கள். அங்கு பதிந்த கால்தடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தார்கள். ஆடுப்பட்டி அருகே பெரிதான கால்தடம் இருக்கின்றது. இது நாயாக இருக்க வாய்ப்பில்லை என கூறினார்கள். இதைப் போலவே இரண்டு மாதங்களுக்கு முன்பாக முகாசிபிடாரி ஊரில் வசிக்கும் 5 விவசாயிகளுக்கு சொந்தமான இருபத்தி ஒன்பது ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து நடந்து வருவதால் விவசாயிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள்.

 

Categories

Tech |