தமிழகத்தை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரிஸ்பேன் டெஸ்டில் அபாரமாக விளையாடியது குறித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இளம்வீரரான வாஷிங்டன் சுந்தர், பிரிஸ்பேன் டெஸ்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் சிறந்த நாளாகும் இது எப்போதும் என் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது.
அதன் பின்பு 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் உடன் ஜோடி சேர்ந்தார். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடியானது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் சேர்ந்து 123 ரன்களை விளாசியுள்ளனர். இதில் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களை குவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளதாவது, “என் மேல் அன்பு வைத்து பிரார்த்தித்த மற்றும் வாழ்த்தியுள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி”. “இது எனக்கு மிகவும் சிறந்த நாளாகும்”, நான் எப்போதும் இதனை மறக்க மாட்டேன்” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.