பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கால் பதிக்காத இடமே இல்லை. உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் என்று 12 வருடங்களில் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டு தேசிய விருது, 10 இக்கும் மேற்பட்ட புத்தகம், 41 வயதில் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் சாதனையாக செய்து முடித்தார்.
தனது 41 ஆவது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‘நா.முத்துகுமார் ஒருமுறை சொன்னார்’ என்ற பதிவு வைரலாகி வருகிறது. அதாவது பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் அழகான பாடல் வரிகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். எளிமையான வார்த்தைகள் மூலம் பாடல்கள் வடித்த முத்துகுமார் இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது வார்த்தைகள் செவிவழி பாய்ந்து கொண்டே இருக்கின்றன.