Categories
கவிதைகள் பல்சுவை

மறக்க வேண்டியதை மற – நீ நேசிப்பவர்கள் உன்னை உதாசீனம் செய்திருந்தால்..!!

செல்லும் பாதையில்… மனம் திறந்து பேசு, மனதில் பட்டதெல்லாம் பேசாதே!  சிலர் புரிந்து கொள்வர்கள், சிலர் பிரிந்து செல்வார்கள், சிலரது பிரிவு உன்னை வருத்தும்! சிலரது பிரிவு உன்னை திருத்தும்.

காயங்கள் இல்லாமல் கனவு காணலாம், நிகழ்காலத்தில் அது சாத்தியப்படாது!! நீ கேட்காத  கேள்விகள் உன் மனதில் பல பதில்களை… ஏற்படுத்தும்! நீ சொல்லும் ஒரு பதில் உன்னை சுற்றியிருப்பவர்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தும்… நெருங்கிய சிலர்உனக்கு விரோதமானால் மனம் தளராதே!! சிலசமயம் மரத்தை வெட்டும் கோடாரியின் கைப்பிடி, வேறொரு  மரத்தால் செய்யப்பட்டிருக்கும்… உண்மை உணர்த்தும் வலியை ஏற்றுக்கொள்வது கடினம்…நீயாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் ஏற்றுக்கொள்ள நேரிடும்!உனக்கானது எது என்பதில் தெளிவாக இரு! இங்கே பேசும் பேச்சை விட மௌனத்தின் சத்தமே.. அதிக அதிர்வளைகளை உன் அழ்மனதில் ஏற்படுத்தும்…

வேரின் தாகம் நீரால் போகும்… ஆனால் நீரின் தாகம் யாராலும் அறிய முடியாது ! உடலும் மனமும் உறவாடும் பொழுது பிறக்கும் குழந்தைகள் தான் கற்பனைகள்..! எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை, உனக்கு வேண்டியவற்றை மட்டும் என் எண்ணு.. உன் எண்ணங்களை சிறைப்படுத்த இன்னும் எந்த சிறைச்சாலைகளும்  கட்டப்படவில்லை உன் விருப்பத்தால் மட்டுமே அது சாத்தியம்! வேதங்களோ, வேத வியாக்கயானங்களோ, உன் சம்மத இன்றி  யாராலும் உன் வாழ்வை மாற்ற முடியாது! நீ என்ன முயற்சிகள் எடுத்தாலும் வெளிச்சத்தின் துணை கொண்டு, இருளை கண்டுபிடிக்க முடியாது! வாழ்க்கை என்ற கண்ணாமூச்சு ஆட்டத்தில், கண்களை கட்டாமலே தேடிக்கொண்டிருக்கின்றோம்…. நம்மை நாமே!!

Categories

Tech |