Categories
மாநில செய்திகள்

மறந்திடாதிங்க…. மறந்தும் இருந்திடாதிங்க…. இன்று கடைசி நாள்…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது.

ஆனால் கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல்,திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15 கடைசி நாளாகும். மற்ற மாவட்டங்களுக்கு நாளையே கடைசி நாள். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மறக்காமல் பயிர் காப்பீடு செய்யுமாறு வேளாண்மை உற்பத்தி கமிஷனர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |